Wednesday, July 12, 2006

http://worldebookfair.com/

Hi,
Some of your might have read this news in the news papers or through e -magazines. World's first Online Book Fair has started yesterday (4th July 06). This book fair will be going on for a month. Website claims there are 1/3 million e-books available for free access / download. Those of you, who are interested in readership, can make use of the opportunity.
http://worldebookfair.com/
World eBook Library Catalogs and Collections
The World eBook Library Consortia Collection shelves more than 330,000 PDF eBooks in 100+ languages contained in 112 of the finest eBook and eDocument collections published on the Internet today. The mission of the World eBook Library's Acquisition Department is to add new eBooks 24/7 to our shelves.

Wednesday, July 05, 2006

தத்துவம் வருது சிரிப்பு.......:-)

. Naaikku naalu kaal irukkalaam. Aana adhala LOCAL call, STD call, ISD
call, even MISSED call kooda panna mudiyathu!

. Thiruvalluvar 1330 kural ezhidhirundhaalum, avarala oru kuralil thaan
paesa mudiyum

. "Enna thaan un thalai suthinaalum, un mudhukai nee paakka mudiyumaa?"

. Enna thaan oruthan gundaa irundalum, avana thuppakkikulla poda
mudiyathu.

. Thel kottina valikkum... paambu kottina valikkum.. mudi kottina
valikkuma?

. Pal vali vantha palla pudungalam....Ana... Kaal vali vantha kaala
pudunga mudiyuma?!


. Pongalukku Governmentla leaveu kudupanga... Ana Idly Dosaikku
kudupangala?!

. Kolammavil kolam podalam. Kadalai mavil kadalai poda mudiuma?!

. Life la onnume illa na bore addikum... Thalaila onnume ellana glare
addikum...

. 7 Paramparaikkku ukkanthu saapida paisa irunthalum... fast food kadaile
ninnukittu dhaan saapidanum!

. Engineering Collegela padichu Engineer aagalaam, Presidency collegela
padichu president aaga mudiyumaa?!

. Thooka marundhu sappitta thookam varum... Anaa...Irumal marundhu
sappitta irumal varathu! (Enna kodumai saaar idhu)

. Vaazha maram thaar podum! Aana adha vachhi road poda mudiyuma?

. 'Hand wash'nna kai kazhuvaradhu, 'Face wash'nna mugam kazhuvaradhu, Appo
'brain wash' nna braina kazhuvaradhaa?

. Tea cupla tea irukum. Appa World Cupla world irukkuma?

. Paalkova paalil irundhu pannalaam, aana rasagullava rasathil irundhu
panna mudiyuma?

. School Testla Bit adikalam... College Testla Bit adikalam... Blood Testla
Bit addika mudiyuma?

Monday, June 05, 2006

காங்கிரசுக்கு alwa

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்களிக்கப்படுமா என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குறுக்கிட்டு, காங்கிரசுக்கு ஆட்சியில் பங்களிக்கப்பட மாட்டாது என தேர்தலுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

Monday, May 29, 2006

அதிமுக சட்டசபை தலைவராக ஜெயலலிதா

அதிமுக சட்டசபை தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டசபையில் தாக்குதல் முயற்சி செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ஆவுடையப்பன் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதித்தார். இதையடுத்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சட்டசபைக்கு தனியாக சென்றார். இந்நிலையில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை தலைவராக அக்கட்சி பொதுசெயலாளர் ஜெயலலிதாவும், துணைத்தலைவராக ஓ. பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொறடாவாக செங்கோட்டையனும், பொருளாளராக ஜெயக்குமாரும், செயலாளர்களாக கருப்பசாமியும், சி.வி. சண்முகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Saturday, May 27, 2006

மாறன் சிறு பிள்ளையா?

ஜெ. கேள்விகள்

ஜெ. கேள்விகள்


தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்றிய அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, ஏழை-எளிய மக்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற தி.மு.க. அரசின் வாக்குறுதி, நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியம் இல்லாதது என்பதை புள்ளி விவர ஆதாரங்களுடன் விளக்கமாக எடுத்துக் கூறினார். அரசியலில் தம்மை ஆளாக்கிய அமரர் எம்.ஜி.ஆரை வணங்கி, பேரவைக்கு தம்மை மீண்டும் தேர்ந்தெடுத்த ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து, தமது உரையை செல்வி ஜெயலலிதா தொடங்கினார். இதனைத்தொடர்ந்து, தி.மு.க அரசின் பல்வேறு உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகள் பற்றி அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், ஆளுநர் உரையிலும் குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய செல்வி ஜெயலலிதா, 86 லட்சம் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க, 1 கோடியே 72 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும், இந்நிலையில், வெறும் மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம் மட்டுமே அரசுப் பொறுப்பில் இரு-ப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், எப்படி அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் வழங்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திரு.கருணாநிதி, சிறு குறு விவசாயிகளிடம் இருந்து - தரிசு நிலங்களைப் பெற்று, அதனை மேம்படுத்தி, அவர்களிடமே திருப்பித் தரப்போவதாக தெரிவித்தார். இது சரியான பதில் அல்ல என்பதை செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியதோடு, 86 லட்சம் பேருக்கு எப்படி நிலம் வழங்க முடியும்? என்பதற்கு உரிய விளக்கத்தை திரு.கருணாநிதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், நிதியமைச்சர் திரு.அன்பழகன் குறுக்கிட்டு, ஏழைகள் அத்தனை பேரு- க்கும் நிலம் கொடுக்கப்படும் என தாங்கள் சொல்லவில்லை என்று கூறினார். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது நிலம் தர முடியாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என செல்வி ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் - ஜெ.
தமிழகத்தில், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் இன்று வலியுறுத்தினார். ஆனால், அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய முடியாது என நிதியமைச்சர் திரு.அன்பழகன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்றிய செல்வி ஜெயலலிதா, விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் சுமார் 7 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்போவதாக தி.மு.க அரசு அறிவித்திருப்பது பற்றி சுட்டிக்காட்டினார். இந்நிலையில், ஏற்கனவே தங்கள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என கேள்வி எழுப்பினார். அவர்கள் திருப்பிச் செலுத்திய தொகையை, அவர்களிடமே அளிக்க வேண்டும் என்றும், இதற்கு மேலும் 500 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகள் பற்றி, தி.மு.க அமைச்சர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை மட்டுமே தள்ளுபடி செய்தால் போதாது என்றும், ஏழை-எளிய விவசாயிகள் பலர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இதர வர்த்தக வங்கிகளில் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தினார். இதற்கு மேலும் 7 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், அவர் தெரிவித்தார். இந்நிலையில், நிதியமைச்சர் திரு.அன்பழகன் குறுக்கிட்டு, விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை மட்டும்தான் தங்களால் தள்ளுபடி செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். விவசாயிகள், தங்கள் மாமன், மைத்துனர் ஆகியோரிடம் எல்லாம் வாங்கிய கடனை, தங்களால் தள்ளுபடி செய்ய முடியாது என்று ஏளனம்தொனிக்க திரு.அன்பழகன் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் புதிய கடன் வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்திருப்பதை பேரவையில் சுட்டிக்காட்டிய செல்வி ஜெயலலிதா, டெல்டா விவசாயிகளின் சாகுபடி பணிக்காக, அடுத்த மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தக் கடன் தொகையை தற்போதே விவசாயிகளுக்கு அளித்தால்தான், விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் அவர்கள் தொடங்க முடியும் என்று தெரிவித்தார். இந்தப் பணத்தை கூட்டுறவு வங்கிகள் எப்படி அளிக்கப்போகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கும் தி.மு.க அமைச்சர்கள் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
சட்டம் - ஜெ.
கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்தச் சட்டம் அமலில் இருப்பதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, அதனை தற்போது வாபஸ் பெறப்போவதாக தி.மு.க அரசு அறிவித்திருப்பது, சிறுபான்மை மக்களை ஏமாற்றும் முயற்சி என செல்வி ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்றிய செல்வி ஜெயலலிதா, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே அவசர சட்டம் மூலம் அறவே நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இந்தச் சட்டம் தற்போது வாபஸ் பெறப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். இதன்மூலம், சிறுபான்மை மக்களை திசைதிருப்பவும், ஏமாற்றவும் தி.மு.க அரசு முயற்சிப்பதாக அவர் புகார் கூறினார். அவசரச் சட்டம் மூலம், ஒரு சட்டம் வாபஸ் பெறப்படுவது குறித்து, கடந்த 1985-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு குறித்தும், செல்வி ஜெயலலிதா எடுத்துக்கூறினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் திரு.கருணாநிதி, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தற்போது வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சில விளக்கங்களை அளித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த செல்வி ஜெயலலிதா, இத்தகைய விளக்கம் உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் எனக்குறிப்பிட்டார். தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் அனைத்து மாணவ-மாணவியருக்கும், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட செல்வி ஜெயலலிதா, இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்ததைப் போன்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க தி.மு.க முயற்சிப்பதாகத் தெரிவித்தார். தமிழக அரசு, நிதி நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, மத்திய திட்டக்குழு அளித்த நிதியை, இலவச சைக்கிள் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த நிதி என தெரிவிப்பது சரியானதல்ல என்றும், செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டார். முந்தைய அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் தேசிய விகிதத்தைவிட, தமிழக வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததை புள்ளி விவர ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய செல்வி ஜெயலலிதா, இந்த உண்மைகள், ஆளுநர் உரையில் மறைக்கப்பட்டு, தவறான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஜெ. சட்டசபை வருகை

ஜெ. சட்டசபை வருகை

தேர்தல் நேரத்தில் தி.மு.க அளித்த பொய் வாக்குறுதிகள் பற்றி அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் இன்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளிக்க முடியாமல், முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தி.மு.க அமைச்சர்கள் திணறினார்கள். சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றி காங்கிரஸ் உறுப்பினர் திரு.பீட்டர் அல்போன்ஸ் கூறிய சில கருத்துகள், உண்மைக்கு புறம்பானவை என அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் திரு.ஜெயக்குமார், திரு.கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மீது தி.மு.க மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதுகுறித்து சபாநாயகரிடம் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் முறையிட்டபோது, அவர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற, பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். மேலும், நேற்று அவையில் இருந்த அனைத்து அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களையும், பேரவைக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னையில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்வி ஜெயலலிதா, தி.மு.க ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அ.இ.அ.தி.மு.க.வின் குரலை அவ்வளவு எளிதாக ஒடுக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார். 60 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று, தாமே பேரவைக்குச் சென்று அ.இ.அ.தி.மு.க.வின் குரலை ஒலிக்கப்போவதாக அவர் தெரிவித்தார். அதன்படி, இன்று காலை சட்டப்பேரவைக்கு செல்வி ஜெயலலிதா சென்றார். பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே பேரவைக்குச் சென்ற அவரை, அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், வளாகத்தில் திரண்டிருந்து வரவேற்றனர். இதன்பின்னர் பேரவைக்குச் சென்ற செல்வி ஜெயலலிதாவை, பேரவை மண்டபத்தில் ம.தி.மு.க எம்.எல்.ஏக்கள் திரு.வீரஇளவரசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திரு.சுதர்சனம் உள்ளிட்டோரும், அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செல்வி ஜெயலலிதா, அதன்பின்னர் பேரவைக்குள் சென்றார். இதனைத்தொடர்ந்து, சபாநாயகர் திரு.ஆவுடையப்பன், முதலமைச்சர் திரு.கருணாநிதி உள்ளிட்டோர் அவைக்கு வந்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தாம் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டதை அடுத்து, 30 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்கள், உண்மைக்கு மாறாக அமைந்திருப்பதாக தெரிவித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை செல்வி ஜெயலலிதா எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் திணறினார்கள். தி.மு.க மற்றும் காங்கிரஸ் தரப்பில் பல முறை குறுக்கீடுகள் இருந்தபோதும், அதற்கெல்லாம் விளக்கம் அளித்து, பேரவைத் தலைவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் தமது உரையை செல்வி ஜெயலலிதா நிறைவு செய்தார்.

Wednesday, May 17, 2006

ஜெயா வழியில் கருனாநிதி

சிதம்பரம் கை விருப்பு

மத்திய அரசு கிலோ அரிசி 2 ரூபாய் திட்டத்திற்கு தமிழக அரசுக்கு உதவி செய்யாது- சிதம்பரம் பாராளுமன்றத்தில் அரிவிப்பு.

வாழ்க முதல்வர்


தி.மு.க கொலை மிரட்டல்

தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்னர், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ம.தி.மு.க உயர்மட்டக் குழு கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் அவைத் தலைவர் திரு.எல்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் திரு.வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.வைகோ, தொலைபேசியில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். சென்னையிலுள்ள தனது வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், கார்களில் வந்து கலாட்டா செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு ம.தி.மு.க தொண்டர்கள் தனது வீட்டிற்கு வந்ததும், காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அப்போது திரு.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வேதமூர்த்தி, தனது அடையாள அட்டையை விட்டுச்சென்றதாகக் கூறி, அதனை செய்தியாளர்களிடம் திரு.வைகோ காண்பித்தார்.